UAE Tamil Web

துபாயில் போக்குவரத்து விதிமீறல்: 526 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் – 210 வாகனங்கள் பறிமுதல்!

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதற்காக, 500க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு துபாய் காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களில் கடுமையான போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதற்காக துபாய் காவல்துறை 526 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்ததுடன், அல் ருவையாவில் 210 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்கள் கடுமையான போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்வதாகவும், அப்பகுதியில் வசிப்பவர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறையின் பொதுத்துறை இயக்குநர்,  பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் தெரிவித்தார்.

வாகன ஓட்டிகளின் உயிருக்கு அல்லது மற்றவர்களின் உயிருக்கு, அல்லது பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனத்தை ஓட்டுபவருக்கு 2 ஆயிரம் திர்ஹம் அபராதம் விதிக்கப்படுவதுடன், 60 நாட்களுக்கு வாகனம் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமம் இல்லாமல் வாகனத்தின் இன்ஜின் அல்லது பேஸ் (சேஸ்) மாற்றுதலுக்கு ஆயிரம் திர்ஹம் அபராதம் விதிக்கப்படுவதுடன், 30 நாட்கள் வாகனம் பறிமுதல் என போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

ஒரு பிளாட்டுடன் வாகனம் ஓட்டினால் 4000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

“தொடர்ந்து எச்சரிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டுகோள்கள் விடுத்த போதிலும், துரதிர்ஷ்டவசமாக சில பொறுப்பற்ற ஓட்டுநர்கள் தங்கள் உயிரையும் மற்றவர்களையும் ஆபத்தில் ஆழ்த்துவதை நாங்கள் பார்க்கிறோம்” என்று அல் மஸ்ரூய் கூறினார்.

துபாய் போலீஸ் செயலி மூலமாகவோ அல்லது துபாய் போலீஸ் கால் சென்டர் 901-ஐ அழைப்பதன் மூலமாகவோ ‘நாம் அனைவரும் போலீஸ்’ திட்டத்தின் கீழ், பொறுப்பற்ற நடத்தைகள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து காவல்துறைக்கு புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

0 Shares
Share via
Copy link