UAE Tamil Web

சிறையில் இருக்கும் மகனை நினைத்து அழுத தாய் – வீடியோ கால் மூலம் இருவரையும் பேசவைத்த துபாய் காவல்துறை..!

Police-2_

துபாய் தண்டனை மற்றும் திருத்த மையங்களில் இருக்கும் ஒரு கைதியை அவரது அம்மாவுடன் வீடியோ கால் மூலமாக பேச உதவிசெய்திருக்கிறது துபாய் காவல்துறை.

ஸ்மார்ட் போனை உபயோகித்துப் பழக்கமில்லாத அந்தத் தாய்க்கு உதவி செய்ய துபாய் காவல்துறையின் ஒரு குழு அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறது. எதிர்காலத்தில் எப்படி இந்த வசதியைப் பெறுவது என்பது குறித்தும் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா காலம் என்பதால் சிறைக்கைதிகளை பார்க்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தனது மகனைப் பார்க்க முடியாமல் தவித்த வேளையில் உதவி செய்த காவல்துறைக்கு அந்தத்தாய் கண்ணீருடன் நன்றி தெரிவித்திருக்கிறார். சிறையில் தனிமையில் வாடிய தனக்கு இந்த போன்கால் அளவில்லா மகிழ்ச்சியை அளித்திருப்பதாக கைதி தெரிவித்தார்.

இதுகுறித்துப் பேசிய துபாய் தண்டனை மற்றும் திருத்த மையங்களின் இயக்குனர் பிரிகேடியர் அலி அல் ஷமாளி,” கொரோனா காலத்திலும் கைதிகளுக்கு வேண்டிய பொருட்கள் கிடைப்பதையும் தங்களது குடும்பத்துடன் அவர்கள் இணைந்திருப்பதை உறுதிப்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்” என்றார்.

மேலும் அவர், “சிறையில் இருப்பவர்களை பார்க்க நினைக்கும் நபர்கள் இந்த ஆன்லைன் வழியை உபயோகப்படுத்தலாம். துபாய் போலீஸ் அப்ளிகேஷனில் ஆன்லைன் விசிட் வசதியை அவர்கள் கிளிக் செய்ய, அவர்களது போனிற்கு SMS வாயிலாக லிங்க் அனுப்பப்படும். அந்த லிங்கினை கிளிக் செய்து பார்வையிட வேண்டிய நேரம் மற்றும் தேதியை உள்ளீடு செய்ய வேண்டும். அதன்பின்னர் காவல்துறை இணையதளத்தில் சென்று யாரிடம் பேசவேண்டும் என்ற தகவலை அளிக்கவேண்டும். அவர்கள் குறிப்பிட்ட கைதி பேசுவதற்கான வீடியோ கால் வசதிகள் சிறைக்குள் செய்துதரப்படும்” என்றார்

Police-2_
0 Shares
Share via
Copy link