UAE Tamil Web

துபாய் போலீஸ்னா சும்மாவா..சிறுவனுக்கு குதிரையை அன்பளிப்பாக வழங்கிய அதிகாரிகள்!

துபாயைச் சேர்ந்த மனியா என்ற 11 வயது சிறுவனுக்கு குதிரை மீது அளவு கடந்த அன்பு இருந்து வந்துள்ளது. குதிரையை வாங்கி வளர்க்க வேண்டும் என்கிற மகனின் ஆசையை நிறைவேற்ற அவரது தாயார் துபாய் காவல்துறையை தொடர்பு கொண்டிருக்கிறார். தனது மகனுக்கு குதிரை ஒன்றை அன்பளிப்பாக வழங்க முடியாமா என அவரது தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை பரிசீலனை செய்த துபாய் காவல்துறை சிறுவனுக்கு தங்கள் குதிரைப்படையில் இருந்து சலில் என்ற ஒரு குதிரையை அன்பளிப்பாக வழங்க முடிவு செய்தனர். துபாய் காவல்துறை தலைமை கமாண்டர் அப்துல்லாஹ் கலீஃபா அல் மாரி அவர்களின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் மத்தியில் சுமூகமான உறவை மேம்படுத்துவதற்காக வேண்டி சிறுவன் மற்றும் அவரது பெற்றோரை நேரில் வரவழைத்து அவர்களுக்கு குதிரை ஒன்றை அன்பளிப்பாக வழங்கி துபாய் காவல்துறை அழகு பார்த்துள்ளது. துபாய் காவல்துறையின் இந்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

3 Shares
Share via
Copy link