UAE Tamil Web

சபாஷ் – துபாய் காவல்துறையின் குதிரைப்படையில் முதல் பெண் அதிகாரி!

துபாய் குதிரைப்படையில் முதல் பெண் அதிகாரியாக ஹலிமா அல் சாதி பொறுப்பேற்றுக்கொண்டார். துபாய் நகரின் பாதுகாப்பு கருதி குதிரைப்படை செயல்பட்டு வருகிறது. குதிரைகளில் ரோந்து சென்று விதிகளை மீறும் மக்களை எச்சரிப்பது, அபராதம் வசூலிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது, பொது இடங்களில் குற்றமிழைப்போரை கைது செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை குதிரைப்படை அதிகாரிகள் மேற்கொள்வர். இதில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு பணி வழங்கி துபாய் காவல்துறை அழகு பார்த்துள்ளது. துபாய் காவல்துறை குதிரைப்படையின் முதல் பெண் அதிகாரி எனும் அந்தஸ்து கிடைத்துள்ளது பெருமையாக இருப்பதாக ஹலிமா அல் சாதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்கு துபாய் காவல்துறை சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். 23 ஆண்டுகளாக துபாய் காவல்துறையில் பணியாற்றி வரும் ஹலிமா, சைபர் க்ரைம், குற்றப்புலனாய்வு, விமான நிலைய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் கீழ் பணியாற்றியுள்ளார்.

5 Shares
Share via
Copy link