துபாயில் வசித்துவரும் தாஜா கஜாப் (Daja Kajab) என்னும் 18 வயது இளம்பெண்ணைக் கடந்த 24 மணி நேரங்களாக காணவில்லை எனவும் இவர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 ஆயிரம் திர்ஹம்ஸ் சன்மானமாக வழங்கப்படும் என அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.

இவரை கடைசியாக கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி ஷேக் சயீத் சாலையில் உள்ள நைட் கிளப்பில் இரவு 2 மணிக்கு பார்த்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறை உதவியுடன் கடந்த 24 மணி நேரங்களில் பல்வேறு இடங்களில் இவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தேடியும் பலனளிக்கவில்லை.

ஆகவே, இவரை நீங்கள் பார்த்தால் mia.shahid என்பவருக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். இல்லையென்றால் துபாய் காவல்துறையைத் (Dubai Police) தொடர்புகொள்ளவும்.
