UAE Tamil Web

துபாய் முழுவதும் 3 லட்சம் சிசிடிவி கேமிராக்கள் – ரியல் Big Boss ஆக மாறிய காவல்துறை!

உலகின் முக்கியமான சுற்றுலா நகரங்களில் துபாய்க்கு என்றைக்குமே முதன்மை இடம் உண்டு. துபாயின் சுற்றுலாவை மேம்படுத்தவும் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் அரசு தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. அண்மையில் ட்ரோன் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகளை செய்யப்போவதாக அறிவித்த துபாய் காவல்துறை, தற்போது 3 லட்சம் சிசிடிவி கேமிராக்களை துபாய் முழுவதும் நிறுவியுள்ளது. AI தொழில்நுட்ப வசதியுடன் செயல்படும் இந்த கேமிராக்களை கொண்டு ஒருவரின் முகத்தை துல்லியமாக கண்டறியலாம்.

Dubai Police catching violators with 2,000 cameras - News - Emirates -  Emirates24|7

வாகனத்தின் நம்பர் ப்ளேட், வாகன ஓட்டிகளின் விபரங்களை நொடிப்பொழுதில் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் துபாய் நகரங்களில் குற்றங்களை குறைக்கலாம் என்றும் அவசர கால உதவிகளை விரைந்து மேற்கொள்ள முடியும் எனவும் துபாய் காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. 3 லட்சம் கேமிராக்கள் துபாய் நகரம் முழுவதும் பொறுத்தப்பட்டுள்ளதால் குற்ற நிகழ்வுகள் நடப்பது அரிதாகவே மாறிவிடும். இதன் மூலம் துபாய் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். 3 லட்சம் துல்லியமாக படம்பிடிக்கும் கேமிராக்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு குற்றம் செய்வது கனவில் முடியாத காரியம். துபாய் காவல்துறையின் இந்த முன்னெடுப்புக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

11 Shares
Share via
Copy link