UAE Tamil Web

பெற்றோர் செய்த தவறு.. அமீரகத்தில் பள்ளியில் கூட சேரமுடியாமல் தவித்த 14 வயது சிறுமி – “சூப்பர் ஹீரோக்களாக” மாறிய துபாய் போலீஸ்

அமீரகத்தில் பெற்றோரின் அலட்சியத்தால் தனக்கென தனி அடையாள ஆவணங்கள் எதுவும் இல்லாத துபாயை சேர்ந்த இளம்பெண் ஒருவர், பள்ளிக்கு சென்று பதிவு செய்வதற்கு துபாய் காவல்துறையின் உதவியைப் பெற்றுள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த 14 வயது சிறுமி, பள்ளியில் சேருவதற்கு அடையாள ஆவணங்களைப் பெற உதவுமாறு தனது அத்தையிடம் கேட்டுள்ளார். பின்னர் அந்த சிறுமியின் அத்தை துபாய் காவல்துறையிடம் இதுகுறித்து உதவி கேட்டு சென்றுள்ளார்.

துபாய் காவல்துறையில் செயல்படும் மனித உரிமைகளுக்கான பொதுத் துறைக்கு, சமூகப் பிரச்சனைகள் காரணமாக ஒரு குடும்பம் சிறுமி ஒருவரை தனித்து விட்டது குறித்த வழக்கு ஒன்று வந்தது. இந்நிலையில் மனித உரிமைகள் துறையின் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவின் இயக்குநர் மைதா அல் பெலூஷி கூறுகையில்..

“அந்த சிறுமிக்கு அடையாள ஆவணங்களை வழங்கவும், பள்ளியில் அவளைப் பதிவு செய்யவும் துபாய் காவல்துறையின் உதவியைப் பெற்றார்” என்று கூறினார். இந்த சிறுமியின் விஷயத்தில் “திருமணத்திற்கு முன்பே அந்த தாய் கர்ப்பமாக இருந்துள்ளார்.

அவர் கர்ப்பமான ஏழாவது மாதத்தில் தான் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தான் திருமணத்திற்கு பிறகு அந்த சிறுமியை புறக்கணித்துள்ளனர். ஆனால் திருமணத்திற்குப் பிறகு தங்களுக்கு பிறந்த மற்ற குழந்தைகளை குறித்து அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

அவர்களின் தவறால் பிறந்த எந்தவித உரிமைகளும் இல்லாத அவர்களது ஒரே குழந்தையாக வளர்ந்து வந்துள்ளார் அந்த சிறுமி என்று அல் பெலூஷி கூறினார்.

சிறுமி வளர்ந்ததும், தனது பிரச்சினையை தீர்க்க துபாய் காவல்துறையின் மனித உரிமைகள் துறைக்கு அழைத்துச் செல்லும்படி தனது அத்தையிடம் கேட்க அவரும் அழைத்து சென்றுள்ளார். துபாய் காவல்துறை அவளது அடையாள ஆவணங்களைப் பெற்று தற்போது அவரை இரவு நேரப் பள்ளியில் சேர்த்துவிட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap