அவசர சூழ்நிலைகளில் தயக்கமின்றி பொதுமக்கள் தங்களிடம் உதவியைக் கோரலாம் என துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. அவசர ரீதியில் உதவிகள் தேவைப்பட்டால் பொதுமக்கள் 999 என்ற எண்ணிற்கும் அவசரம் இல்லை இருப்பினும் உதவி தேவைப்படுகிறது எனில் 901 என்ற எண்ணிற்கும் துபாய் காவல்துறையை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Looking for help due to an urgent situation? Or just more information?
In case of an emergency, dial 999. Always dial 901 for non-emergency enquiries.#Expo2020🇦🇪 pic.twitter.com/85gyzZwSD6— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) October 20, 2021
இதுகுறித்து துபாய் காவல்துறை வெளியிட்ட ட்விட்டர் செய்தியில்,” அவசர உதவி மற்றும் தகவல்களைத் தெரிந்துகொள்ள மக்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம். அவசர உதவிகளுக்கு 999 என்ற எண்ணிற்கும் அவசரமில்லா உதவிகளுக்கு 901 என்ற எண்ணிற்கும் மக்கள் அழைக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
