UAE Tamil Web

ஊனமாகப் பிறந்ததால் மருத்துவமனையிலேயே குழந்தையை விட்டுச்சென்ற பெற்றோர் – “விளைவுகள் விபரீதமாக இருக்கும்” – காவல்துறையின் அதிரடி..!

child-abuse

புர் துபாயில் உள்ள மருத்துவமனையில் கடந்த 6 மாத காலமாக அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. உடல் ஊனத்துடன் பிறந்த தங்களது குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர் அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவந்திருக்கிறார்கள். இந்நிலையில் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை சொன்னதும், குழந்தையை வீட்டிற்குக் கூட்டிச்செல்ல பெற்றோர்கள் மறுத்துள்ளனர்.

இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் காவல்துறையிடம் புகாராளித்தது. இந்தத் தம்பதியின் முதற்குழந்தையும் பிறவிக் குறைபாட்டுடன் பிறந்திருக்கிறது. எனவே, அடுத்து கருத்தரித்தால் அவற்றிற்கும் குறைபாடுகள் வரலாம் என மருத்துவமனை எச்சரித்திருந்தது.

இருப்பினும் இரண்டாவது முறையும் கருத்தரித்த அந்தத் தாய், பிறவிக் குறைப்பாட்டுடன் உள்ள குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். இதன் காரணமாக ஆறு மாத காலம் மருத்துவமனையில் அந்த ஆண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை முடிவெடுத்திருக்கிறது. குறைபாடுள்ள குழந்தையை வீட்டிற்கு கூட்டிச்செல்ல முடியாது தொடர்ந்து சிகிச்சை அளியுங்கள் என பெற்றோர் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

மருத்துவமனை இதற்கு இசைவு தெரிவிக்காததால் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர் இந்தப் பெற்றோர். இதற்கிடையே துபாய் காவல்துறை பெற்றோரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறது.

ஒருவழியாக குழந்தையை நாங்கள் பத்திரமாக வளர்ப்போம் என பெற்றோரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டு குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தது காவல்துறை.

இதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறை மனிதாபிமானத்துறையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு இயக்குனர் டாக்டர். அலி அல் மட்ரோஷி,” குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றோர்களே விட்டுச் செல்வது அதிகரித்திருக்கிறது. இம்மாதிரி செயல்களில் ஈடுபடுவோர்மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம். ஆகவே, பெற்றோர்கள் இதுபோன்ற சிறுபிள்ளைத் தனமான காரணங்களைக் கூறி, குழந்தைகளை விட்டுச் செல்வது கூடாது. இல்லையேல் தண்டனைகள் கடுமையாக இருக்கும்” என எச்சரித்துள்ளார்.

child-abuse
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap