UAE Tamil Web

எச்சரிக்கை : துபாய் நகருக்குள் புகுந்த “காட்டு விலங்கு” – யாரவது பார்த்தால் உடனடியாக இந்த நம்பருக்கு போன் செய்யுங்கள்..!

Black_

துபாயின் ஸ்ப்ரிங்க்ஸ் 3 ஆம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வனவிலங்கு ஒன்று நுழைந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் கருஞ்சிறுத்தை அல்லது சிறுத்தை பொது இடங்களில் உலவித் திரிவது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து பயிற்சி பெற்ற நிபுணர்கள் வனவிலங்கைப் பிடிக்க களத்தில் இறங்கியுள்ளதாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து துபாய் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில்,”பொது இடங்களுக்கு வன விலங்குகளைக் கொணர்வது சட்டப்படி குற்றமாகும். விதிமீறலில் ஈடுபட்டவர்களுக்கு சிறைத்தண்டனையும் கடுமையான அபராதமும் விதிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்களில் யாராவது விலங்கைப் பார்த்தால் 999 என்ற எண்ணிற்கு உடனடியாகத் தொடர்புகொள்ளும்படி காவல்துறை தெரிவித்துள்ளது.