UAE Tamil Web

பறக்க முடியாமல் தவித்த பறவை – துபாய் போலீஸ் செய்த உதவி!

துபாயில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் பறக்க முடியாமல் தவித்த பறவைக்கு துபாய் போலீஸ் அதிகாரி ஒருவர் உதவி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வெயிலில் சிறிய வல்லூறு ஒன்று பறக்க முடியாமல் சுருண்டு விழ இருந்தது. அதனை மீட்ட துபாய் போலீஸ் அதிகாரி தன்னிடம் இருந்த வெள்ளை துண்டால் அதனை போர்த்தி தண்ணீர் அளித்து ஆசுவாசப்படுத்தினார். இதனை வீடியோ எடுத்த டிக்டாக் பயனர் ஒருவர், அதனை இணையத்தில் வெளியிட்டு துபாய் காவல்துறையின் மனிதாபிமான செயலை போற்றியுள்ளார்.

கொளுத்தும் வெயிலில் பறவையை காப்பாற்றிய அதிகாரிக்கு சல்யூட் அடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சி லைக்ஸ்களை அள்ளி வருகிறது. இதேபோன்று துபாயில் அண்மையில் மாடியில் இருந்து குதிக்க இருந்த பூனையை பத்திரமாக காப்பாற்றிய 4 பேருக்கு தலா 50,000 திர்ஹம்ஸ் அளித்து துபாய் ஆட்சியாளரும் அமீரக துணை அதிபருமான ஷேக் முகமது பின் ரஷீத் அவர்கள் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1 Share
Share via
Copy link