UAE Tamil Web

வீடியோ: கொளுத்தும் வெயிலில் கார் டயரை மாற்றிய இளைஞர் ; காரில் இருந்து இறங்கிவந்து உதவி செய்த துபாய் காவல்துறை அதிகாரிகள்..!

police-officers-large

துபாயில் சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்ட காரின் டயரை மாற்ற வாகனவோட்டிக்கு துபாய் காவல்துறை அதிகாரிகள் உதவும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

டிக்டாக்கில் வெளிவந்த அந்த வீடியோவில், சாலையில் தனியாளாக டயரைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தவருக்கு துபாய் காவல்துறை அதிகாரிகள் வந்து உதவி செய்வது பதிவாகியுள்ளது. அருகில் உள்ள கடைகளில் நின்றவர்களில் ஒருவர் இதனை வீடியோ எடுத்து டிக்டாக்கில் வெளியிட்டிருக்கிறார்.

அமீரக மண்ணில் எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் பரிவும் கரிசனமும் சில சமயம் நம்மை ஆச்சர்யப்படுத்துவதுண்டு. மேலே குறிப்பிட்ட இந்நிகழ்ச்சியும் அப்படிப்பட்டதுதான். தனியாளாக கஷ்டப்படும் நபருக்கு உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

police-officers-large
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap