UAE Tamil Web

“துபாய் போலீச சாதாரணமா நெனச்சுட்டேன்” – ரோமானியாவின் கால்பந்து பயிற்சியாளருக்கு இன்ப அதிர்ச்சியளித்த துபாய் காவல்துறை..!

Coach-Romania

ரோமானியா நாட்டு கால்பந்து அணியின் பயிற்சியாளரான காஸ்மின் ஒலோரோயுஸ் (Cosmin Olăroiu’s) சமீபத்தில் துபாய் வந்திருந்தபோது தனது விலைமதிப்பற்ற கைக்கடிகாரத்தை தவறவிட்டிருக்கிறார். சொல்லப்போனால் அந்த வாட்ச் திருடப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து புகார் ஒன்றினையும் காஸ்மின் அளித்திருக்கிறார். ஆனால், மீண்டும் தனது வாட்ச் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவரிடத்தில் இல்லை.

துபாய் காவல்துறையின் பொது கட்டளைப்பிரிவு இந்த வழக்கை விசாரித்ததில் வாட்ச் ஐரோப்பியாவிற்கு கடத்தப்பட்டது தெரியவந்திருக்கிறது. 3 பேரை கைது செய்த காவல்துறை வாட்சை ஒருவழியாக துபாய்க்கு கொண்டுவந்தனர்.

இந்நிலையில் இன்று காஸ்மினிடம் வாட்ச் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்துப் பேசிய காஸ்மின்,” மக்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ள எந்த முயற்சியையும் எடுக்கும் துபாய் காவல்துறையைப் பாராட்ட என்னிடம் வார்த்தைகளே இல்லை எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. துபாய் காவல்துறையை சாதாரணமாக நினைத்துவிட்டேன். ஆனால் கிடைக்காது என நினைத்த எனது கடிகாரத்தை அவர்கள் மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு மிகவும் நன்றி” எனக் குறிப்பிட்டார்.

Coach-Romania
1 Share
Share via
Copy link
Powered by Social Snap