UAE Tamil Web

பூட்டிய கார், லிப்ட் மற்றும் பாத்ரூமில் இருந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை காப்பாற்றிய துபாய் காவல்துறை..!

door

துபாயில் 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 2021 பிப்ரவரி இறுதி வரை கார், லிப்ட், ரூம் மற்றும் பாத்ரூமில் சிக்கிக் கொண்ட 212 குழந்தைகள் மீடகப்பட்டுள்ளனர்.

- Advertisment -

2021 தொடக்கத்திலிருந்து தற்போது வரை தங்களது காரில் சிக்கிக்கொண்ட 11 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதேபோல் ரூம் மற்றும் பாத்ரூமில் மாட்டிக்கொண்ட 15 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இது குறித்து ஒரு உயர் அதிகாரி கூறுகையில் கார் லிப்ட் ரூம் மற்றும் பாத்ரூம் போன்றவற்றிலிருந்து 212 குழந்தைகள் 2020 ஜனவரியிலிருந்து இந்த வருடம் பிப்ரவரி இறுதிவரை காப்பாற்றப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் 2020 ஆம் ஆண்டு மட்டும் 186 குழந்தைகளை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இதில் 53 குழந்தைகள் காரில் சிக்கிக் கொண்டவர்கள். 9 குழந்தைகள் லிப்டில் மாட்டிக் கொண்டவர்கள். 124 குழந்தைகள் ரூம் மற்றும் பாத்ரூமில் சிக்கிக் கொண்டவர்கள் என்று தெரிவித்தார்.

வீடு தான் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சிறந்த இடமாக இருந்தாலும் கூட பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.

தங்கள் குழந்தைகள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்ததோடு, குழந்தைகளுக்கு கைகளுக்கு எட்டும் தூரத்தில் கார் சாவி போன்ற பொருட்களை வைக்கக்கூடாது. வீட்டில் வேலை செய்பவர்களையும் இந்த முன்னெச்சரிக்கைகளை பின்பற்றவும் அறிவுறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.