UAE Tamil Web

பூட்டிய கார்களில் இருந்து இதுவரை 39 குழந்தைகள் மீட்பு – கவனம் தேவை என துபாய் காவல்துறை அட்வைஸ்!

துபாயில் பூட்டிய கார்களில் இருந்து இந்த ஆண்டு மட்டும் 39 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. பெற்றோர்களின் கவனக்குறைவால் குழந்தைகளை கார்களிலேயே விட்டுச் செல்வது வாடிக்கையாகி வருகிறது. ஒருசிலர் உடனடியாக சுதாரித்துக் கொண்டாலும் பலர் குழந்தைகளை மறந்து விட்டுவிடுகின்றனர். இதனால் கடும் வெப்பத்தில் குழந்தைகள் சிரமப்பட்டு சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படும் ஆபத்து நிலவுகிறது. இந்த நிலையில் கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இதுவரை துபாய் நகரங்களில் பூட்டிய கார்களில் இருந்து 39 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன.

Dubai: 2 children locked inside car by father, rescued by police - News |  Khaleej Times

குழந்தைகளை காரில் அழைத்துச் செல்லும்போது பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் இறங்கும்போது பின் இருக்கைகளை சோதித்துவிட்டு இறங்க வேண்டும் எனவும் துபாய் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. கார் சாவிகளை குழந்தைகளிடம் வழங்குவதற்கும் காரில் விளையாடுவதற்கும் ஒருபோதும் பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது என துபாய் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது

0 Shares
Share via
Copy link