UAE Tamil Web

போலீஸ்னா இப்டி இருக்கணும் – துபாய் போலீஸ் வேற லெவல்!

வல்லரசு நாடுகளுடன் போட்டிப்போடும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது துபாய் காவல்துறை. அந்த வகையில் அவசர உதவி எண்ணான 999 கட்டுப்பாட்டு மையத்திற்கு கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டும் 1.2 மில்லியன் அழைப்புகளை துபாய் போலீஸ் எதிர்கொண்டிருக்கிறது. மிகவும் அவசரகால தேவைக்கு (Extreme Emergency) வெறும் 2.33 நிமிடத்திலேயே ஸ்பாட்டிற்கு விரைந்து விடுகின்றனர் துபாய் போலீசார். 6 நிமிடத்திற்குள் உதவி தேவைப்படும் ஸ்பாட்டிற்கு செல்ல வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக உள்ளது. இருப்பினும் குறைந்த நேரத்தில் அதி வேகமாக குற்றசம்பவம் நிகழும் இடங்களுக்கு மின்னல் வேகத்தில் துபாய் போலீஸ் பறந்துவிடும். இதேபோல அவசர காவல் தேவைக்கு (Emergency) வெறும் பத்தே நிமிடங்களில் துபாய் போலீஸ் களத்தில் இருக்கும்.

Dubai Police streamline access to distress calls | Uae – Gulf News

அவசரம் இல்லாத சாதாரண உதவி அழைப்புகளுக்கு (Non-Emergency) 10.45 நிமிடங்களுக்குள்ளாகவே துபாய் போலீஸ் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்றுவிடும். இதேபோல கடந்த 3 மாதங்களில் அவசர எண்ணான 999க்கு வந்த அழைப்புகள் மட்டும் 1,177,347. இதில் 99.6% அழைப்புகள் வெறும் பத்தே விநாடிகளில் பதிலளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் 1,094,373 அழைப்புகள் வந்துள்ளன. இதேபோல அவசர கால எண்களான 901 மற்றும் 999க்கும் இடையிலான வித்தியாசத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என துபாய் காவல்துறை அதிகாரிகள் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர். 999 எண்ணானது மிக மிக அவசர தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். 901 எண்ணை அவசரமில்லாத அவசிய தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். இரு எண்களையும் குழப்பமின்றி கவனமாக கையாள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது துபாய் காவல்துறை!

4 Shares
Share via
Copy link
Powered by Social Snap