UAE Tamil Web

முக்கியச் செய்தி: துபாய் மணலில் கிடக்கும் ஆசிய நபரின் சடலம் : இவரைத் தெரிந்தவர்கள் உடனடியாக தொடர்புகொள்ளவும் – காவல்துறை வேண்டுகோள்..!

dead

துபாயில் உள்ள முஹைசினா பகுதியில் ஆசியாவைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் மணல் பகுதியில் கிடந்துள்ளது. இதனை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இறந்தவரின் உடலில் எந்தவித ஆவணங்களும் இல்லை என்பதால் இறந்தவர் குறித்து எவ்வித தகவலையும் பெற முடியாத சூழலில் காவல்துறை தவிக்கிறது. மேலும், காணாமல் போனவர் குறித்த எவ்வித வழக்குகளும் பதிவாகாததால் இறந்தவர் யார் என்பதைக் கண்டறியும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே பொதுமக்கள் யாரேனும் இவரைப் பற்றி அறிந்திருந்தால் உடனடியாக அல் குசைஸ் காவல்நிலையத்தின் 901 என்ற இலவச எண்ணிற்கு கால் செய்யுமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

dead
6 Shares
Share via
Copy link