UAE Tamil Web

பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்ற தவறியதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஸ்கூபா டைவர்ஸ்.! சிகிச்சை அளித்த துபாய் போலீஸ்

scuba

டிகம்பரஷ்ஷன் நோயால்(decompression sickness) பாதிக்கப்பட்ட ஸ்கூபா டைவர்ஸுக்கு (ஆழ்கடல் டைவர்ஸ்) துபாய் போலீஸ் சிகிச்சை அளித்துள்ளது.

ஸ்கூபா டைவிங் என்றழைக்கப்படும் ஆழ்கடல் நீச்சலில் ஈடுபடும் டைவர்கள் வழக்கமாக பல மணிநேரங்கள் நீருக்கடியில் இருந்த பின்னோ அல்லது ஆழ் கடலில் இருந்து குறைந்த நேரத்தில் விரைவாக மேலே வந்த பின்னோ தேவையான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாததன் விளைவாக அவர்களுக்கு டிகம்பரஷ்ஷன் சிக்னஸ் என்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.

ஆழ்கடலில் நீருக்கடியில் இருந்து முறையான பாதுகாப்பு விதியை பின்பற்றாமல் மேலே வருவதால் டைவர்ஸின் உடலின் எந்தப் பகுதியிலும் குமிழ்கள் உருவாகி இடம் பெயர்வதால் decompression sickness ஏற்பட்டு உடலில் மூட்டு வலி, தடிப்புகள், பக்கவாதம் மற்றும் இறப்பு வரை என உச்சகட்ட பாதிப்புகள் ஏற்படும்.

இந்நிலையில் துபாய் போலீஸ் சுகாதார மையத்தில் அமைந்துள்ள decompression ரூமிற்குள், decompression sickness நோயால் பாதிக்கப்பட்ட 26 ஸ்கூபா டைவர்ஸுக்கு துபாய் காவல்துறை சிகிச்சை அளித்துள்ளது. இது பற்றி பேசிய போக்குவரத்து மற்றும் மீட்புத் துறையின் ஆக்ஸிஜனேற்ற சிகிச்சை இயக்குநர் மேஜர் இஸ்மாயில் ஹசன் மஹ்மூத், decompression sickness நோய்வாய்ப்பட்ட அமெச்சூர் டைவர்ஸுக்கு சிகிச்சையளிக்க துபாய் போலீஸ் டிகம்பரஷ்ஷன் ரூம் உதவியுள்ளது என்று தெரிவித்தார். கடந்த ஆண்டு நடந்த வெவ்வேறு நிகழ்வுகளில் அவர்கள் டிகம்பரஷ்ஷன் நோயால் அவதிப்பட்டனர்.

“நாங்கள் பாதிக்கப்பட்ட ஸ்கூபா டைவர்ஸுக்கு சிகிச்சையளித்தோம், பக்கவாதத்தால் முடங்கிப்போன பிறகு அவர்கள் மீண்டும் நடக்க உதவினோம்”என்றும் குறிப்பிட்டார். டைவர்கள் அவசர காலங்களில் 999 என்ற என்னை அழைக்கவும் அல்லது வேலை நேரங்களில் 04- 4166666 என்ற எண்ணை அழைக்க துபாய் போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

scuba
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap