UAE Tamil Web

துபாய் : ஒரே நாளில் 3 வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த சாலைவிபத்துகள் – போக்குவரத்து நெரிசலால் வாகனவோட்டிகள் அவதி..!

Stock-Dubai-Police

துபாயில் மூன்று வெவ்வேறு இடங்களில் நேர்ந்த விபத்துகளினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

அபுதாபி செல்லும் வழியில் ஷேக் முகமது பின் சயீத் சாலையில் அல் ரஷிதியா மேம்பாலத்திற்கு அருகே ஒரு விபத்து ஏற்பட்டிருக்கிறது. இன்று காலை 8 மணிக்கு விபத்தானது நிகழ்ந்திருக்கிறது.

ஜெபல் அலியிலிருந்து வரும் அல் கைல் சாலையில் அல் லத்தீஃபா மருத்துவமனை மேம்பாலத்திற்கு செல்லும் வழியில் அடுத்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது விபத்து ஷோரூம் மேம்பாலத்திற்கு அருகே நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனினும் மக்கள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

Stock-Dubai-Police
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap