UAE Tamil Web

அமீரகம்: சாலையில் ஃபாஸ்ட் லேனை (Fast lane) எப்போது உபயோகிக்கவேண்டும் – துபாய் காவல்துறை வெளியிட்ட வீடியோ..!

Sheikh Zayed Road

அமீரக சாலைகளில் ஃபாஸ்ட் லேனில் (fast lane) வாகனம் ஓட்டுவது அச்சுறுத்தும் விவகாரமாக இருக்கலாம். வேகமான வாகனங்கள் செல்வதற்காக விடப்படும் ஃபாஸ்ட் லேனை (fast lane) மெதுவாக வாகனமோட்டுபவர்கள் உபயோகிப்பதால் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்புகளில் வாகனங்களை ஓட்டிவரும் நபர்கள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

சாலையின் இடது கோடியில் அமைந்துள்ள இந்த ஃபாஸ்ட் லேனை எப்படி உபயோகிக்கவேண்டும் என துபாய் காவல்துறை வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளது.

நீங்கள் பிற வாகனத்தை முந்திச்செல்லாத வரையில் இந்த லேனை பயன்படுத்துதல் கூடாது என துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

அவசரகால மற்றும் முந்திச் செல்லும் வாகனங்களுக்கு இடமளிக்கவேண்டும் என்ற பிரச்சாரத்தின் ஒருபகுதியாக துபாய் காவல்துறை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து வழிமுறைகள் மற்றும் விதிகளுக்கான மந்திரிசபை தீர்மான எண் (179)  2017 ன் படி, சாலையில் பின்புறத்திலோ அல்லது இடப்பக்கத்திலிருந்தோ வரும் வாகனங்களுக்கு வழிவிட மறுத்தால் 400 திர்ஹம்ஸ் அபராதமும் 4 கரும்புள்ளிகளும் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sheikh Zayed Road
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap