UAE Tamil Web

20 நிமிடத்தில் மறையும் எழுத்துக்கள்; துபாயில் விஸ்வரூபமெடுக்கும் மேஜிக் பேனா வழக்குகள்..!

Cheques_

மாயாஜால படங்களில் ஒரு பேனா வருமல்லவா? அதைக்கொண்டு எழுதினால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த எழுத்துக்கள் மறைந்துவிடும் என திரைப்படங்களில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சிகளுக்கு நாமும் சிலிர்த்துப்போய் சில்லறையை வீசியிருக்கிறோம். ஆனால், துபாயில் சமீப காலங்களில் மில்லியன் கணக்கிலான பண மோசடிகளுக்கு இந்த மேஜிக் பேனா காரணமாக அமைந்திருக்கிறது.

கார் உள்ளிட்ட விலை அதிகமுள்ள பொருட்களை வாங்குகையில் பிறரால் நிரப்பப்பட்ட காசோலையில் கையெழுத்திடவோ அல்லது பிறர் கொடுக்கும் பேனா கொண்டோ காசோலையை நிரப்ப வேண்டாம் என காவல்துறை மக்களை எச்சரித்திருக்கிறது.

காரணம் இதுதான். உதாரணமாக 20,000 திர்ஹம்ஸ் என காசோலையில் நிரப்பப்பட்டு உங்களிடம் கையெழுத்து வாங்கப்படும். பின்னர் தான் மேஜிக் பேனாவால் எழுதப்பட்ட அந்த 20 ஆயிரம் திர்ஹம்ஸ் என்ற வார்த்தைகள் காற்றில் கரையும்.

மேஜிக் பேனாவால் எழுதப்படும் எழுத்துக்கள் 20 நிமிடங்களில் மறைந்துவிடும். அதன்பின்னர் மோசடி கும்பல் கூடுதல் தொகையை அதில் நிரப்பிக்கொள்ளும். சில கில்லாடி கிங்சைஸ்கள் ரொம்ப தடபுடலாக விலையுயர்ந்த பொருட்களை வாங்கிவிட்டு இந்த பேனாவால் காசோலையில் கையெழுத்து போட்டுக்கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறது. செல்லுபடியாகாத செக்கை வைத்துக்கொண்டு என்ன செய்வதெனத் தெரியாமல் காவல்துறையிடம் படை எடுக்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.

மேஜிக் பேனாவைப் பயன்படுத்தி மில்லியன் திர்ஹம்ஸ் கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் துபாய் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

இந்த மேஜிக் பேனாவைக் கொண்டு எழுதப்பட்ட எழுத்துக்களை கண்டுபிடிக்க குறிப்பிட்ட வகை கதிரியக்க முறையை துபாய் காவல்துறை தற்போது பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap