பேருந்து விபத்து எதிரொலி ; வாகன ஓட்டிகளுக்கு துபாய் போலீஸ் எச்சரிக்கை!

கடந்த ஜூன் 6 ஆம் தேதி பேருந்து விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து துபாய் போலீஸ் முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

வாகன ஓட்டிகள் மிக வேகமாக செல்வதால் கொடூரமாக சில விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகையால் வாகன ஓட்டிகள் சட்டம் வகுத்துள்ள அளவான வேகத்தில் வாகனங்களை இயக்கும் படி, துபாய் போலீஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவுரை கூறியுள்ளது.

UAE போக்குவரத்து சட்டத்தின் படி; வாகனங்களை அதிவேகத்தில், அதாவது மணிக்கு 60 Km வேகத்தை விட கூடுதலாக இயக்கும் வாகன ஓட்டிகளுக்கு 1000 திரஹம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

வாகன ஓட்டிகள் சீட் பெல்ட்டை எப்போதும் பயன்படுத்துமாறும், துபாய் போலீஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Loading...