பாதசாரிகளுக்கு துபாய் போலீசார் எச்சரிக்கை மற்றும் அறிவுரை..!

Reminder in order to prevent accidents. (Photo : Gulf News)

சாலைகள் கடக்கும்போது தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று துபாய் போலீஸ் எச்சரிக்கை செய்துள்ளது.

சாலை விபத்துகளைத் தடுக்க ஒரு நினைவூட்டலாக இந்த அறிவுரையை துபாய் போலீஸ் கூறியுள்ளது.

சாலையைக் கடக்கும்போது மொபைல் போன் பயன்படுத்துவதற்கு எதிராக பாதசாரிகளுக்கு துபாய் போலீசார் கடந்த வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

அந்த ட்வீட்டில் போலீசார், “மொபைல்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, சாலைகளை கடக்க பாதுகாப்பான வழி”, என்பதை குடியிருப்பாளர்களுக்கு நினைவுபடுத்தினர்.

முன்னதாக, பாதசாரிகள் சாலையைக் கடக்கும்போது தங்கள் மொபைல் போன்களில் அரட்டை அடிப்பது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது ஆபத்தானது என்று அமீரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஏனெனில், இது பெரும்பாலும் கவனத்தை சிதறடிக்கும். மேலும், விபத்துக்களுக்கு வழிவகுக்கிறது, இது கொடூர மரணங்கள் மற்றும் கடுமையான காயங்களையம் ஏற்படுத்துகிறது.

Loading...