அமீரகத்தில் விபத்துகளைத் தவிர்க்க, வாகன ஓட்டிகள் அதிவேகமாகச் செல்வதைத் தவிர்க்கவும், வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளி கடைபிடித்து செல்லவும் அபுதாபி காவல்துறை நினைவூட்டியுள்ளது.
சமூக ஊடகங்களில் ஒரு புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தில், அபுதாபி காவல்துறை அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்காட்டி விழிப்புணர்பு ஏற்படுத்தி வருகின்றது. அதிவேகமாக செல்வதே சாலை மரணங்களுக்கு முக்கிய காரணம் என்றும் வலியுறுத்துகிறது.
ட்விட்டரில் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு வீடியோவில், “உலக புள்ளிவிவரங்களின்படி, அதிவேக பயணமே உலகில் அதிக போக்குவரத்து இறப்புகளை ஏற்படுத்துகிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.
“வாகனத்தின் வேகம் அதிகமாக இருப்பதால், அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம், இது பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் மேலும் பிறருக்கு ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. விபத்துகளைத் தவிர்க்க, வாகனம் ஓட்டும்போது அவசரப்படுவதைத் தவிர்க்கவும் போலீசார் அறிவுறுத்தினார்.
வாகனம் ஓட்டுபவர்கள் கவனச்சிதறலைத் தவிர்க்க, தங்கள் பயணத்தின்போது செல்போன்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சட்டத்தின்படி, அதிகபட்ச வேக வரம்பை விட மணிக்கு 10 கிமீ அதிகமாக பயணிப்பவர்களுக்கு 400 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் வேக வரம்பை விட 80 கிமீ அதிகமான வேகத்தில் பயணிப்பவர்களுக்கு 3,000 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்படும். 23 Black Points வழங்கப்படுவதுடன் அவர்களுடைய கார் 60 நாட்களுக்கு ஜப்தி செய்யப்படும்
வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான தூரத்தை விட்டுச் செல்லாதவர்களுக்கு 400 திர்ஹம் அபராதம் மற்றும் 4 Black Points அபராதமாக விதிக்கப்படும்.