சமீபத்தில் நடந்து முடிந்த துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச்-ன் ஒரு பகுதியாக பிரம்மாண்ட ஓட்டப்பந்தையம் நடைபெற்றது. இதில் துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் கலந்துகொண்டு ஓடினார்.
அப்போது கூட்டத்தில் ஓடிவந்த ஒருவர், ஹம்தானிடம் பேச முயற்சிக்க அவரை அருகில் வரச் சொல்லியிருக்கிறார் இளவரசர். “உங்களைப் பார்க்கத்தான் இதில் கலந்துகொண்டேன்” என அந்தப் பயணி தெரிவிக்க இளவரசர் அதற்கு நன்றி தெரிவித்தார்.
எங்கிருந்து வருகிறீர்கள்? என இளவரசர் கேட்க, மாலி நாட்டிலிருந்து வருவதாகத் தெரிவித்தார் அந்தப் பயணி. எங்களது நாடு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? எனக் கேட்ட இளவரசரிடம் மிகவும் பிடித்திருக்கிறது எனச் சொல்லியிருக்கிறார் அந்தப் பயணி.
அந்தப் பயணி எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
View this post on Instagram