UAE Tamil Web

உலகின் மிகப்பெரிய ஹம்மர் கார்.. வாயை பிளக்க வைத்த துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான்..!

துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான மதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வைத்திருக்கும் ஹம்மர் கார் பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.

ராட்சத கார் போல் தோற்றமளிக்கும் இந்த ஹம்மர் காரின் உயரம் 22 அடி, நீளம் 46 அடி, அகலம் 20 அடி ஆகும்.

Rainbow Sheikh's Colossal Hummer H1 "X3" is Three Times Bigger Than A Regular Hummer | Carscoops

இந்தக் கார் ஹம்மர் H-1 X-3 என்று அழைக்கப்படுகிறது. வழக்கமான H-1 மாடல் ஹம்மர் காரின் அளவைவிட மூன்று மடங்கு அதிகம் என்பதால் ‘X 3’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

This Is The World's Largest Hummer - And It Makes Other Vehicles On The Road Look Tiny

இந்தக் காரின் உள்ளே படுக்கையறை, கழிப்பறை, சமையலறை உள்ளன. ஒவ்வொரு சக்கரத்ததிற்கும் தனித்தனி இன்ஜின் என இந்தக் காரில் நான்கு டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் தீவிர கார் ரசிகர். கோடிக்கும் மேல் செலவழித்து விதவிதமான கார்களை வாங்கி சேகரித்து வருகிறார்.

World's Biggest Moving Hummer, the Hummer H1 X3, Goes for a Short But Exciting Drive - autoevolution

அபுதாபில், கார்களுக்கெனத் தனி அருங்காட்சியகமே வைத்துள்ளார். உலகத்தரத்திலான கார்களை சேகரித்துவருதற்காக இவர் கின்னஸ் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார். தற்போது அவரது அருங்காட்சியகத்தில்தான் ராட்சத ஹம்மர் கார் உள்ளது. இந்த கார் காட்சிக்கு மட்டுமல்ல, சாலைகள், பாலைவனங்களில் ஓட்டுவதற்குதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap