UAE Tamil Web

பெண்களுக்கு பாதுகாப்பு என்றால் அது துபாய் தான்.. ஆய்வில் தகவல்!

உலகளவில் பல்வேறு நிறுவனங்கள் நடத்திய ஆய்வுகளின் பல பிரிவுகளில் அமீரகம் தான் முதன்மை வகிக்கிறது. தற்பொது பெண்களின் பாதுகாப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் உலகளவில் துபாய் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் முன்னணி பயணக் காப்பீட்டு நிறுவனமான Insure My Trip நடத்திய ஆய்வின்படி, துபாயில் மிகக் குறைந்த குற்ற சதிவீதம் இருப்பதால் உலகளவில் பெண்கள் தனியாகப் பயணிக்கும் மூன்றாவது பாதுகாப்பான நகரமாக துபாய் திகழ்கிறது.

துபாயில் பொதுவாகவே குற்ற சதவீதங்கள் மிகக் குறைவாக உள்ளது. இதனால் பெண்கள் இலகுவாக பயணிக்க பாதுகாப்பான நகரமாக துபாய் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி துபாயில் பெரும்பாலான துறையிகளில் பெண்களுக்கு என தனி பிரிவு உள்ளது. பொதுப் போக்குவரத்தில் கூட பெண்களுக்கு என தனி இட வசதி அமைக்கப்பட்டுள்ளது.

InsureMyTrip ஆய்வின்படி, சவுதி அரேபியாவின் நகரமான மதீனா, உலகளவில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பான நகர வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தாய்லாந்தின் சியாங் மாய் நகரம் இரண்டாவது பாதுகாப்பான நகரமாக உள்ளது. ஜப்பானில் உள்ள கியோட்டோவும், சீனாவின் மக்காவோவும் தனியாக பயணிக்கும் பெண் பயணிகளுக்கான முதல் ஐந்து பாதுகாப்பான நகரங்களை நிறைவு செய்துள்ளன.

குறைந்த பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்ட நகரங்களை ஆய்வு செய்யும் போது, ​​தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் அதிக குற்ற விகிதங்கள் காரணமாக குறைந்த தரவரிசையில் உள்ளது.

இரண்டாவதாக கோலாலம்பூர், மூன்றாவதாக இந்தியாவின் தலைநகர் டெல்லி, ஜகார்த்தா மற்றும் பாரீஸ் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5 Shares
Share via
Copy link