உலக அளவில் வாகன ஓட்டிகளுக்கு மற்றும் ஓட்டுவதற்கு சிறந்த மற்றும் மோசமான நகரங்களின் பட்டியல் வெளியீடு!

Dubai ranks 2nd best global city for driving (Photo: Gulf News)

பல வழிச்சாலைகள், குறைந்த பெட்ரோல் விலை மற்றும் சாலை விபத்தில் குறைவான வீதம், ஆகிய சிறப்புகள் அடைப்படையில் வாகனம் ஓட்டுவதற்கு உலகின் சிறந்த நகரத்திற்கான இரண்டாவது இடத்தை துபாய் பெற்றுள்ளது.

பிரெஞ்சு சார்ந்த ஒரு கணக்கெடுப்பு புதன்கிழமை இன்று வெளியிடப்பட்டது, இதில் 100 உலகளாவிய நகரங்களை தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. அந்த கணக்கெடுப்பில் ஓட்டுநர்களுக்கான சிறந்த மற்றும் மோசமான இடங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

வாகனம் ஓட்டுவதற்கான உலகின் சிறந்த நகரங்கள்:

அந்த அறிக்கையின்படி, வாகனம் ஓட்டுவதற்கான உலகின் சிறந்த நகரம் கனடாவின் கல்கரி, இரண்டாவது இடத்தை துபாய் பெற்றுள்ளது, சுவிட்சர்லாந்தின் ஒட்டாவா மற்றும் பெர்ன் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளன.

 1. கல்கரி, கனடா
 2. துபாய், UAE
 3. ஒட்டாவா, கனடா
 4. பெர்ன், சுவிட்சர்லாந்து
 5. எல் பாசோ, அமெரிக்கா
 6. வான்கூவர், கனடா
 7. கோதன்பர்க், ஸ்வீடன்
 8. டசெல்டார்ஃப், ஜெர்மனி
 9. பாஸல், சுவிட்சர்லாந்து
 10. டார்ட்மண்ட், ஜெர்மனி

வாகன ஓட்டிகளுக்கு மோசமான நகரங்கள்:

வாகன ஓட்டிகளுக்கு மோசமான நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் மும்பை முதலிடத்திலும் அதே போல் கொல்கத்தா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

 1. மும்பை, இந்தியா
 2. உலான்பாதர், மங்கோலியா
 3. கொல்கத்தா, இந்தியா
 4. லாகோஸ், நைஜீரியா
 5. கராச்சி, பாகிஸ்தான்
 6. போகோடா, கொலம்பியா
 7. சாவ் பாலோ, பிரேசில்
 8. மெக்சிகோ நகரம், மெக்சிகோ
 9. ரியோ டி ஜெனிரோ, பிரேசில்
 10. மாஸ்கோ, ரஷ்யா

குறைவான சாலை விபத்துகள் கொண்ட நகரங்கள்:

குறைவான சாலை விபத்துகள் கொண்ட நகரங்களின் பட்டியலில் துபாய் நான்காவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்கள் முறையே ஜப்பான் ஒசாகா மற்றும் டோக்கியோ பிடித்துள்ளன. மூன்றாவது இடம் சிங்கப்பூர்.

 1. ஒசாகா, ஜப்பான்
 2. டோக்கியோ, ஜப்பான்
 3. சிங்கப்பூர், சிங்கப்பூர்
 4. துபாய், UAE
 5. கிரேஸ், ஆஸ்திரியா
 6. கோபன்ஹேகன், டென்மார்க்
 7. சூரிச், சுவிட்சர்லாந்து
 8. எசென், ஜெர்மனி
 9. டசெல்டார்ஃப், ஜெர்மனி
 10. ப்ரெமன், ஜெர்மனி

அதிக சாலை விபத்துகள் கொண்ட நகரங்கள்:

அதிக சாலை விபத்துகள் கொண்ட நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் கொல்கத்தா நான்காவது இடத்திலும், மும்பை ஆறாவது இடத்திலும் உள்ளது.

 1. உலான்பாதர், மங்கோலியா
 2. மாஸ்கோ, ரஷ்யா
 3. கராச்சி, பாகிஸ்தான்
 4. கொல்கத்தா, இந்தியா
 5. லாகோஸ், நைஜீரியா
 6. மும்பை, இந்தியா
 7. இஸ்தான்புல், துருக்கி
 8. செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா
 9. போகோடா, கொலம்பியா
 10. மெக்சிகோ நகரம், மெக்சிகோ

Source: Driving Cities Index 2019

Loading...