உலகின் மிகவும் பிசியான ஏர்போர்ட்களின் பட்டியலில் துபாய் சர்வதேச விமான நிலையம் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
விமானப் போக்குவரத்துக்கான ஆலோசனை நிறுவனமான OAG சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகளின் படி, உலகின் பிசியான விமான நிலையங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறது துபாய் சர்வதேச விமான நிலையம்.
மூன்றாவது இடத்தில் ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையமும் நான்காவது இடத்தில் லண்டன் ஹீத்ரூ விமான நிலையமும் உள்ளன.
துபாய் எக்ஸ்போ 2020, உலகக்கோப்பை T20 போட்டிகள் ஆகியவை காரணமாக வெளிநாட்டிலிருந்து துபாய் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.
