UAE Tamil Web

துபாய் ரெசிடென்சி விசா எடுப்போருக்கான புதிய மருத்துவ பரிசோதனை மையம் திறப்பு..!

MEDICAL FITNESS

புர் துபாயில் புதிதாக மருத்துவ உடற்தகுதி பரிசோதனை மையம் ஒன்றினை துபாய் சுகாதார ஆணையம் (DHA) திறந்துள்ளது.

புதிதாக விசா பெறுவோர் மற்றும் புதுப்பிக்க விரும்புவோர் மருத்துவ உடற்தகுதி பரிசோதனையில் தேர்ச்சி பெறுதல் வேண்டும் என்பது அமீரகத்தின் முதன்மையான விதிமுறைகளில் ஒன்றாகும்.

DHA வின் இந்த புதிய அறிவிப்பின்மூலம் துபாயில் உள்ள மருத்துவ உடற்தகுதி பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்திருக்கிறது.

இந்தப் புதிய மையமானது ஷரஃப் டிஜி மெட்ரோ நிலையத்திற்கு ( Sharaf DG Metro Station) (Exit 4) அடுத்தபடியாக உள்ள செண்ட்ரல் மாலில் அமைந்துள்ளது.

ஞாயிறு முதல் வியாழன் வரையிலான நாட்களில் காலை 7.30 மணிமுதல் மதியம் 2.30 மணிவரையில் இந்த மையம் திறக்கப்படும். நாளொன்றுக்கு சராரியாக 500 பேருக்கான சேவைகள் இங்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவை அதிகமாக ஏற்படும்போது இந்த மையம் திறந்திருக்கும் நேரம் மற்றும் நாளொன்றுக்கு அளிக்கப்படும் சேவைகளின் எண்ணிகையும் அதிகரிக்கப்படும் என DHA தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய DHA வின் மருத்துவ பரிசோதனை மைய இயக்குனர் மைசா அல் பஸ்தானி,” விரைவான மற்றும் திறமையான சேவைகளை வழங்குவதே எங்களுடைய நோக்கமாகும். மருத்துவ பரிசோதனை சேவையை வழங்க தொடர்ந்து பாடுபடடுவருகிறோம். சமீப ஆண்டுகளில் இதற்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்திவருகிறோம். எங்களது வாடிக்கையாளர்களின் நலன் கருதியே இம்முயற்சிகளை எடுத்துவருகிறோம்” என்றார்.

பரிசோதனை மையங்களில் கொரோனா விதிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்பட்டு வருவதாக பஸ்தானி தெரிவித்தார்.

MEDICAL FITNESS
0 Shares
Share via
Copy link