UAE Tamil Web

துபாயில் மாஸ் காட்டிய இந்திய சிறுமி ; 120 மொழிகளில் பாடல் பாடி அசத்தல் – துணைத்தூதரகம் பாராட்டு..!

suchetha

துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் நேற்று கலை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. #AzadiKaAmritMahotsav எனும் திட்டத்தின் அடிப்படையில் திறமைமிகு இந்தியர்களை வெளியுலகத்திற்கு காட்டும் நோக்கமாக அமைந்த இந்த நிகழ்ச்சியில் துபாயைச் சேர்ந்த இந்திய சிறுமியான சுசிதா சதீஷ் கலந்துகொண்டார்.

மொத்தம் 130 மொழிகளில் பாடலைப்பாடி சுசிதா அனைவரையும் திகைப்படைய வைத்திருக்கிறார். உலக சாதனை முயற்சியாக நிகழ்த்தப்பட்ட இதில் தூதரக தலைமை அதிகாரிகள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து துணைத் தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,”ஒரு கச்சேரியில் அதிக மொழிகளில் பாடல் பாடியவர் என்ற கின்னஸ் சாதனைக்காக சுசிதா முயற்சித்திருக்கிறார். 30 இந்திய மொழிகள் மற்றும் 90 வெளிநாட்டு மொழிகளில் அவரது பாடல் அமைந்திருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளது.

“தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பினால் நான் மிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன். துணைத் தூதரக அதிகாரிகளின் முன் என்னுடைய திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக்கொடுத்த அனைவர்க்கும் நன்றி” என சுசிதா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நேரலையில் ஒரே கச்சேரியில் அதிக மொழிகளில் பாடல் பாடிய குழந்தை என்னும் பிரிவில் இருமுறை ஏற்கனவே உலகசாதனை படைத்தவர் சுசிதா என்பது குறிப்பிடத்தக்கது.

suchetha
1 Share
Share via
Copy link