துபாய் இந்தியப் பள்ளி ஊழியர் கேரள வெள்ளத்தில் தன்னுடைய குழந்தைகளை மீட்க்கும் போது நீரில் மூழ்கி பலி!

A Dubai expat died while rescuing his son and nephew from flood waters in Malappuram district of Kerala in southern India on Tuesday

தனது மகளின் திருமணத்திற்காக விடுமுறையில் கேரள சென்றுள்ள துபாயில் வசிப்பவர் வெள்ளத்தில் குழந்தைகளை மீட்கும் போது நீரில் மூழ்கி பலி.

தென்னிந்தியாவின் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அவர் தனது மகனையும், மருமகனையும் வெள்ள நீரில் இருந்து மீட்க சென்ற போது பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

துபாயில் உள்ள ஒரு இந்தியப் பள்ளியின் ஊழியரான ரசாக் அக்கிபரம்பில் (42), தனது மகளின் திருமணத்திற்காக ஒரு வாரத்திற்கு முன்பே இந்தியாவுக்கு திரும்பி சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கேரளாவிலிருந்து தொலைபேசியில் Gulf News உடன் பேசிய ரஸாக்கின் மைத்துனர் ஷரீஃப் கூறுகையில், “ரசாக் மூன்று குழந்தைகளின் தந்தை, வெள்ளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளை மீட்டெடுத்த பின்னர் அவர் நெல் வயலில் மூழ்கினார்” என்று கூறினார்.

பருவமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரது வீட்டில் தங்கியிருந்ததாக ஷரீஃப் கூறினார்.

இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...