UAE Tamil Web

துபாய் திரும்ப இனிமேல் குடியிருப்பாளர்கள் GDRFA-வின் ஒப்புதல் பெற வேண்டாம்.! வெளியானது புதிய தகவல்..

GDRFA

வெளிநாடுகளில் இருக்கும் துபாய் குடியிருப்பாளர்கள் மீண்டும் துபாய் திரும்பி வருவதற்கு இனிமேல் GDRFA-விடம் முன் அனுமதி பெற வேண்டியதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை எமிரேட்ஸ் விமான சேவை கால் சென்டர் நிர்வாகி ஒருவர் கலீஜ் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 காரணமாக சில மாதங்கள் தடைப்பட்டிருந்த சர்வதேச விமான போக்குவரத்து சீரானாலும் அமீரகம் திரும்பும் குடியிருப்பாளர்கள் ICA ஒப்புதலையும், துபாய் குடியிருப்பாளர்கள் GDRFA-விடம் முன் அனுமதியும் பெறுவது கட்டாயம் என்பது நடைமுறையில் இருந்தது.

இந்நிலையில் தான் தற்போது துபாய் ரெசிடென்ஸ் விசா மூலம் மீண்டும் துபாய் திரும்பும் குடியிருப்பாளர்கள் இனி GDRFA-விடம் ஒப்புதல் பெற தேவையில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் துபாய் திரும்ப வரும் குடியிருப்பாளர் ஒருவருக்கு, விமான நிறுவனத்திடம் இருந்து வந்த மின்னஞ்சலில் துபாய் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்களுக்கு GDRFA ஒப்புதல் தேவையில்லை என குறிப்பிடப்பட்டிருப்பதை கண்டதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

GDRFA ஒப்புதல் தேவையில்லை என்பது பிப்ரவரி 12 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் கால் சென்டரை தொடர்பு கொண்டு இது பற்றி கேட்ட போது, துபாய் குடியிருப்பாளர்கள் மீண்டும் நகரத்திற்குத் திரும்ப தங்கள் பயண நேரத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கோவிட் 19 பி.சி.ஆர் சோதனை நெகட்டிவ் சான்றிதழ் ஒன்றே போதும் என பதில் கிடைத்ததாகவும் கலீஜ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

GDRFA
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap