UAE Tamil Web

நடுக்கடலில் 2 மாத பயணம் – பசிபிக் பெருங்கடலை படகில் கடந்து துபாய் பெண்கள் கின்னஸ் சாதனை!

பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக துபாயில் வசித்து வரும் பெண்கள் புதிய சரித்திரம் ஒன்றை படைத்துள்ளனர்.

துபாயில் வசித்து வரும் ஜேன் லியோனார்ட் (37), ஆர்லாஹ் டெம்ப்சே (27) ஆகியோர் பிரிட்டனில் வசிக்கும் விக்கி ஆன்ஸ்டே (43) உடன் இணைந்து பசிபிக் பெருங்கடலை படகில் கடக்கும் Great Pacific Raceல் கலந்து கொள்ள முடிவு செய்தனர். இந்த போட்டியில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து ஹவாய் வரையிலான 4,400 கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்த பசிபிக் பெருங்கடலை படகில் கடக்க வேண்டும். இதற்காக கடந்த மே 31ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கிய இந்த மகளிர் குழு, கடும் மழை, ராட்சத அலை, 120 கி.மீ வேகமான காற்று உள்ளிட்ட இயற்கை இடர்களை துணிச்சலோடு எதிர்கொண்டனர்.

Dubai residents battle 120kph winds and 15m waves in 4,400km Great Pacific Raceகடும் போராட்டத்திற்கிடையே 60 நாள் 13 மணி நேரம் 13 நிமிடங்களில் தங்களது பயண இலக்கை எட்டி மகளிர் குழு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. முன்னதாக பசிபிக் பெருங்கடலை 62 நாள் 18 மணி நேரம் 36 நிமிடங்களில் கடந்ததே சாதனையாக இருந்ததை தற்போது இந்த மகளிர் குழு முறியடித்துள்ளது. 24 மணி நேரத்தில் 4 மணி நேரம் படகை ஓட்டியும் 2 மணி நேரம் ஓய்வெடுத்தும் திட்டமிடுதலோடு இந்த குழு பயணித்துள்ளது.

Western People — Irish woman part of crew that breaks Great Pacific Race world record | Western People
Credit : Great Pacific Race

ஓய்வெடுப்பதற்காகவே படகில் வெறும் 2 மீட்டர் அளவிலான கேபின் ஒன்றையும் பயணக் குழு வடிவமைத்துள்ளது. கின்னஸ் சாதனை படைத்தது மட்டுமின்றி பசிபிக் பெருங்கடலை கடந்தது வாழ்வின் மறக்க முடியாத பயணம் என ஆச்சரியத்துடன் கூறுகின்றனர் சாதனை பெண்கள். பெண்களால் எதையும் முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் பசிபிக் பெருங்கடலை சிறிய படகில் கடந்து சரித்திரம் படைத்த மகளிர் குழுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

1 Share
Share via
Copy link