UAE Tamil Web

திறப்பு விழா சலுகையாக இலவச உணவு வழங்கும் துபாய் உணவகம்..! ஆஃபரை பெற என்ன செய்ய வேண்டும்..?

food

துபாயிலுள்ள மால் ஆப் தி எமிரேட்ஸில் இந்திய பாரம்பரிய உணவுகளுக்கான ரெஸ்டாரன்ட் ஒன்று வரும் பிப்ரவரி 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று திறக்கப்பட உள்ளது. கவு கலி(Khau Galli) என்ற பெயர் கொண்ட இந்த ரெஸ்டாரன்டின் மூன்றாவது கிளை இதுவாகும்.

- Advertisment -

இந்த ரெஸ்டாரன்டின் துவக்க விழாவை முன்னிட்டு விருந்தாளிகள் சாப்பிடும் மீல்ஸ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துவக்க விழாவை கொண்டாடும் விதமாக விருந்தாளிகளை வரவேற்பதற்காக இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் இந்த அருமையான ஆஃபரை பெறுவதற்கு அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெஸ்டாரண்டை குறிப்பிட (tag) வேண்டும். அதன் மூலமாக துவக்கவிழா அன்று நீங்கள் சாப்பிடும் அனைத்து உணவு வகைகளும் முழுவதுமாக பிரீ பிரீ பிரீ.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறும்போது, எங்களை ஊக்குவிப்பதே வாடிக்கையாளர்கள் தான். அதனால் அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த மால் மிக கவனமாக கடைபிடிக்கிறது. ஒவ்வொரு டேபிளுக்கும் இடையே மூன்று மீட்டர் தூரம் சமூக இடைவெளியும் பின்பற்றப்படுகிறது என்று கூறினார்.

மேலும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நாங்கள் மிக கவனமாக கடைபிடிக்கிறோம் என்று கூறியதோடு பாரம்பரியமான சைவ உணவுகளை இந்த மால் ஆப் தி எமிரேட்ஸில் உள்ள ஃபுட் கோர்ட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் நாங்கள்  பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறினார்.

இந்த திறப்பு விழா கொண்டாட்டத்தை ஆல் யூ கேன் ஈட் பார் ப்ரி (all you can eat for free) என்ற வாசகத்தை முன்னிருத்தி விருந்தாளிகளின் மகிழ்ச்சிக்காக நாங்கள் இந்த உணவை இலவசமாக வழங்குகின்றோம் என்று கூறினார்.

இந்த மூன்றாவது கிளையை பிரியங்கா அகர்வால் மண்டிலியா மற்றும் அவரது கணவர் ஆனந்த் மண்டிலியா திறந்து வைக்கிறார்கள். இவர்கள் ஜுமேரா லேக் டவரில் 2019ஆம் ஆண்டு கவு கலி ரெஸ்டாரண்டின் முதல் கிளையை திறந்து வைத்தனர். 2020 ஆம் ஆண்டு இப்னு பட்டுடாவில் இரண்டாவது கிளையை திறந்து வைத்தார்கள். தற்பொழுது இந்த மூன்றாவது கிளையையும் திறந்து வைக்க இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.