பசி, ஆனால் பணம் இல்லையா? கவலைவேண்டாம், துபாய் உணவகம் இலவச உணவை வழங்கி வருகிறது!

Hungry, but have no money? An Arabic restaurant with several branches in Dubai and Sharjah is offering free food, and they would only ask you to pay with a smile.

துபையில் உணவகம் ஒன்றில் நீங்கள் உண்ணும் உணவுக்கு பணம் செலுத்த முடியாவிட்டால் அவற்றிற்கு பணம் கேட்கப்பட மாட்டாது.

பசி, ஆனால் பணம் இல்லையா? கவலைவேண்டாம், துபாய் மற்றும் ஷார்ஜாவில் பல கிளைகளைக் கொண்ட ஒரு அரபு உணவகம் இலவச உணவை வழங்கி வருகிறது. மேலும், அவர்கள் பணத்திற்கு பதிலாக புன்னகை மட்டுமே உங்களிடம் கேட்கின்றனர்.

ஜோர்டானிய வெளிநாட்டவரும், ஃபவுல் டபிள்யூ ஹம்முஸின் உரிமையாளருமான Fadi
Ayyad (வயது 39) அவர்கள் khaleej Times பத்திரிகையிடம் கூறுகையில், “இலவச உணவை வழங்குவதற்கான நோக்கம், யாரும் பசியுடன் இருக்கக்கூடாது, என்ற கொள்கை என்றும், குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் வேலை தேடி வெளியில் இருந்து வருபவர்களுக்காக இந்த சேவை தொடங்கப்பட்டது” என்றும் கூறினார்.

எமிரேட்ஸ் மால் அருகில் அமைந்துள்ள அல் பர்ஷா உணவகத்தின் வெளியே உள்ள கண்ணாடி சுவற்றில் “உங்களால் உணவு வாங்க முடியாவிட்டால், அது இலவசம் இது அல்லாஹ்விடமிருந்து (கடவுள்) கிடைத்த பரிசு”, என்று எழுதியிருக்கும். இது விளம்பரத்தின் நோக்கத்தோடு எழுதவில்லை அனைவரும் தாராளமாக உணவு உண்ண வரவேண்டும் என்பதற்காக எழுதியதாக உணவகத்தின் உரிமையாளர் Fadi கூறினார்.

இங்கு தினமும் காலை முதல் இரவு உணவு வரை சுமார் 30 – 35 பேருக்கு இலவச உணவை வழங்குகிறார்கள். மக்கள் வேலை நேரங்களில் காலை 7 மணி முதல் அதிகாலை 3 மணி வரை, வாரத்தில் ஏழு நாட்கள் எப்போது வேண்டுமானாலும் இலவச உணவு பெறலாம்.

இந்த இலவச உணவின் காரணமாக அவர் லாபத்தை இழக்கிறாரா? என்று கேட்ட போது, Fadi ‘இல்லை’ என்று கூறினார். மாறாக அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய அவரது தொண்டு பணி, தனது வணிகத்தை உயர்த்த உதவியதாக கூறினார்.

ஃபவுல் டபிள்யூ ஹம்முஸின் முதல் கிளையை 2011 இல் திறந்த பின்னர், இப்போது அவர் அல் பர்ஷாவில் மொத்தம் மூன்று கிளைகளையும், ஷார்ஜாவில் ஒரு கிளையையும் ஷேக் சயீத் சாலையில் விரைவில் மற்றுமொரு கிளை திறக்கவுள்ளதாக கூறினார்.

முதலில் லாபம் ஈட்டும் நோக்கத்தில் தான் உணவகம் திறத்தோம், ஆனால் பின்னர் உணவு என்பது அனைவருக்கும் அடிப்படை உரிமை, பணம் செலுத்த முடியாதவர்கள் பசியுடன் இருக்கக்கூடாது, என்று நாங்கள் உணர்தோம்.

அனைவரின் உள்ளத்தையும் வெகுவாக சுண்டி இழுக்கும் இவரின் மெய் சிலிர்க்கும் பணியை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.

Source : Khaleej Times

Loading...