துபாய் உணவகங்களில் இலவச வடிகட்டப்பட்ட குழாய் நீர் விரைவில்!

Restaurants will now have to offer tap water under the new Dubai Food Code

துபாயில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் அடுத்த ஆண்டு முதல் பாட்டில் தண்ணீருக்கு மாற்றாக வடிகட்டப்பட்ட குழாய் நீரை வாடிக்கையாளர்களுக்கு வழங்க உள்ளன.

அடுத்த ஆண்டு துபாய் முனிசிபாலிடி (DM) வெளியிடவுள்ள துபாய் Food code -2020இல் அமைக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளாக, ஒற்றை-பயன்பாட்டு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றி 13வது துபாய் சர்வதேச உணவு பாதுகாப்பு மாநாட்டின் போது முனிசிபாலிட்டியின் குடிநீர் கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் அமல் அல்பெட்வாவி ஊடகங்களிடம் கூறுகையில், “நீங்கள் ஒரு ஹோட்டல் அல்லது உணவகத்திற்குச் செல்லும் போது, வடிகட்டப்பட்ட குழாய் நீர் அல்லது பாட்டில் தண்ணீர் இரண்டில் எது வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.” என்று கூறியுள்ளார்.

மேலும், தொட்டிகளை சுத்தமான முறையில் பராமரித்து வந்தால், மக்கள் குழாய் நீரை பயன்படுத்தலாம். இதில் உடைந்த குழாய்கள், தொட்டியில் துரு இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

2020 க்குள் துபாய் Food code-2020 அறிமுகப்படுத்துவதுடன் இந்த முயற்சி தொடங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஏற்கனவே சில உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் நடைமுறையில் உள்ளன, என்று அல்பெட்வாவி கூறினார்.

Loading...