UAE Tamil Web

“லவ் யூ அப்பா” – துபாய் ஆட்சியாளருடைய மகளின் உருக்கமான பதிவு..!

shekh Mohammed

அமீரகத்தில் நேற்று (ஜூன் 21) தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து துபாய் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது தந்தைகள் குறித்து உணர்ச்சிப்பூர்வமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

துபாய் கலாச்சாரம் மற்றும் கலை ஆணையத்தின் தலைவர் ஷேக் லத்தீஃபா பின்ட் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது தந்தையும் அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் குறித்து நெகிழ்ச்சியான பதிவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Latifa M R Al Maktoum (@latifamrm1)

அதில்,”தந்தையர் தின வாழ்த்துகள். லவ் யூ அப்பா” என லத்தீஃபா குறிப்பிட்டுள்ளார்.

இளம் வயதில் குழந்தை ஒன்றினை கையில் ஏந்தியபடி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இருக்கும் ஷேக் முகமது அவர்களின் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

மறைந்த துபாயின் துணை ஆட்சியாளரும் நிதியமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் மகன் ஷேக் ரஷீத் பின் ஹம்தான் அல் மக்தூம் தனது தந்தையைக் குறித்து உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Lateefa Bint Maktoum (@lateefam)

அமீரகத்தின் முன்னாள் பிரதமரும் முன்னாள் துபாய் ஆட்சியாளருமான மறைந்த ஷேக் மக்தூம் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுடைய மகளும் டஷ்கீல் -ன் (Tashkeel) நிறுவனர் மற்றும் தலைவரான ஷேக்கா லத்தீபா பின்ட் மக்தூம் அல் மக்தூம் தனது இஸ்டாகிராம் பக்கத்தில்,” லவ் யூ அப்பா, உங்களுடைய ஆன்மா சாந்தியடையட்டும். நீங்கள் எங்களைவிட்டு பிரிந்தாலும் உங்களுடைய நினைவு என்றும் எங்களைவிட்டு அகலாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

shekh Mohammed
0 Shares
Share via
Copy link