ஸ்பின்னிஸ் துபாய் என்னும் 92 சைக்கிள் சேலஞ்ச் இன்று பிப்ரவரி 19 நடைபெற்று வருவதால் பல முக்கிய சாலைகள் மூடப்படுவதாக RTA அறிவித்துள்ளது.
இந்த சைக்கிள் சேலஞ்ச் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். இதனால் அந்நேரத்தில் மாற்று சாலைகளில் செல்லுமாறு வாகன ஓட்டிகளை துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) ஒரு தெரிவித்துள்ளது.
சைக்கிள் சேலஞ்ச் காரணத்தால் காலதாமதத்தைத் தவிர்க்க, வாகன் ஓட்டுநர்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு புறா]ப்படுமாறு RTA அறிவுறுத்தியுள்ளது.
ஸ்பின்னிஸ் துபாய் 92 சைக்கிள் சேலஞ்ச் என்பது மத்திய கிழக்கின் பிரீமியம் விளையாட்டு பந்தயங்களில் ஒன்றாகும். இதற்கு உலகம் முழுவதிலிருமிருந்து ஆயிரக்கணக்கான சைக்கிள் ரைடர்கள் பங்கேற்பார்கள். 2021 இல் நடைபெற்ற சைக்கிள் சேலஞ்சில் 1,600 க்கும் மேற்பட்ட ரைடர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.