UAE Tamil Web

ஈத் அல் பித்ர் : இலவச பார்க்கிங்கை அறிவித்தது துபாய் RTA..!

abudhabi parking

ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு துபாயில் இலவச பார்க்கிங் திட்டத்தை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி ரமலான் 29 ஆம் தேதிமுதல் ஷவ்வால் 3 ஆம் தேதிவரை, துபாயில் உள்ள மல்டி லெவல் பார்க்கிங் இடங்கள் தவிர்த்து, அனைத்து பொதுப் பார்க்கிங் பகுதிகளிலும் மக்கள் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மாதங்களில் 29 அல்லது 30 நாட்கள் மட்டுமே உண்டு. இந்த ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நீடித்தால் எத்தனை நாட்கள் இலவச பார்க்கிங் அமலில் இருக்கும் என்பதைக் கீழே காணலாம்.

ரமலான் 29 நாட்கள் நீடித்தால்: 4 நாட்கள் இலவச பார்க்கிங் அமலில் இருக்கும். மே மாதம் 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மே 14 ஆம் தேதிவரை (வெள்ளிக்கிழமை) வரை.

ரமலான் 30 நாட்கள் நீடித்தால்: 5 நாட்கள் இலவச பார்க்கிங் அமலில் இருக்கும். மே மாதம் 11 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் மே 15 ஆம் தேதிவரை (சனிக்கிழமை) வரை.

abudhabi parking
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap