UAE Tamil Web

துபாய்: ரமலானை முன்னிட்டு பேருந்து, டிராம், வாடிக்கையாளர் சேவை மையங்கள் இயங்கும் நேரங்கள் மாற்றம் – RTA அறிவிப்பு..!

Dubai-Metro_

ரமலான் மாதத்திற்கான புதுப்பிக்கப்பட்ட கால அட்டவணையை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி மெட்ரோ, டிராம், பேருந்து சேவைகளின் இயங்கு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அவை குறித்து கீழே காண்போம்.

துபாய் மெட்ரோ

துபாய் மெட்ரோவின் ரெட் லைன் வழியாக செயல்படும் ரயில்கள் கீழ்க்கண்ட நேரத்தில் இயங்கும்.

  • சனிக்கிழமைகள் – புதன்கிழமைகள்: அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு 12 வரை.
  • வியாழக்கிழமைகள்: அதிகாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை.
  • வெள்ளிக்கிழமைகள்: காலை 10 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 1 மணி வரை.

துபாய் மெட்ரோவின் கிரீன் லைன் வழியாக செயல்படும் ரயில்கள் கீழ்க்கண்ட நேரத்தில் இயங்கும்.

  • சனிக்கிழமைகள் – புதன்கிழமைகள்: காலை 5.30 மணி முதல் நள்ளிரவு 12 வரை.
  • வியாழக்கிழமைகள்: காலை 5.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை.
  • வெள்ளிக்கிழமைகள்: காலை 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 1 மணி வரை.

டிராம்

சனிக்கிழமைகள் – வியாழக் கிழமைகள்: காலை 6 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை டிராம் சேவைகள் இயங்கும்.

வெள்ளிக்கிழமைகள்: காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை இயக்கப்படும்.

பேருந்து சேவைகள்

வ.எண் நிலையங்கள் சேவை
1. பிரதான நிலையங்கள் (கோல்டு சூக் நிலையம் உட்பட) அதிகாலை 4.29 மணி முதல் 12.29 மணி வரை இயங்கும்.
2. அல் குபைபா நிலையம்  அதிகாலை 4.16 முதல் அதிகாலை 1 மணி வரை இயங்கும்.
3. துணை நிலையங்கள் (சத்வா நிலையம் உட்பட) அதிகாலை 4.45 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும். (இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் C01 பேருந்து மட்டும் 24 மணிநேரமும் இயங்கும்).
4. அல் குஸைஸ் நிலையம் அதிகாலை 4.31 மணி முதல் 12.04 மணி வரை இயங்கும்.
5. அல் கூஸ் இண்டஸ்ட்ரியல் நிலையம் காலை 5.05 மணி முதல் இரவு 11.35 மணி வரை செயல்படுத்தப்படும்.
6. ஜெபல் அலி நிலையம் அதிகாலை 4.58 முதல் 12.15 வரை செயல்படும்.

வாகன சோதனை மையங்கள்

வ.எண் நிலையங்கள் சேவை
1. தஸ்ஜீல் (அல்-அவீர், அல்-டுவார் மற்றும் வார்சன்) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
2. ஹத்தா மையம்  காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
3. ஜெபல் அலி டிஸ்கவரி கார்டன் மற்றும் அரேபியா நகர மையங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை
4. அல் குசைஸ், அல் பர்ஸா மற்றும் மோட்டார் சிட்டி காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 வரை
5. ஆட்டோ புரோ மையம் (சத்வா மற்றும் மன்கூல்) காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
6. அல் அவிரில் உள்ள அல் முத்தகமெலா மையம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, இரவு 8 மணி முதல் அதிகாலை 1 மணி வரை
7. அல் குவோஸில் உள்ள அல் முத்தகமெலா மையம் காலை 8 மணி முதல் அதிகாலை 1 மணி வரை
8. எமாரத் மையம் (அல் அடிட், நாத் அல் ஹமர் மற்றும் அல் குசைஸ்) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
9. வாசில் மையம் (அல் ஜதாஃப், அல் அரபி மற்றும் நாத் அல் ஹமர்) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை
10. அல் முமாயாஸ் மையம் (அல்-மிஷார் மற்றும் அல் பர்ஸா மால்) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மற்றும் இரவு 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை

வாடிக்கையாளர் சேவை மையம்

உம் ரமூல், அல் தவர், அல் மனாரா, தேரா, அல் பர்ஷா மற்றும் அல் கஃபாஃப் பகுதியில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பாட்டில் இருக்கும்.

ஃபெர்ரி சேவைகள் (Ferry service)

வ.எண் வழித்தடம் சேவை
1. அல் குபைபா – துபாய் கால்வாய் – துபாய் மெரீனா மால் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை (துபாய் கால்வாயில் தினந்தோறும் காலை 11 மணிக்கு மேற்கொள்ளப்படும் சேவை தொடரும்)
2. மெரீனா மால்  சுற்றுலாவாசிகளுக்கான இந்த சேவை வாரத்தின் அனைத்து நாட்களிலும் மாலை 3.30 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் நடைபெறும்.

கார் பார்க்கிங்

கட்டண பார்க்கிங் இடங்களைப் பொறுத்தவரையில் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமைகள் வரை காலை 8:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரையிலும் இரவு  8:00 மணிமுதல் நள்ளிரவு 12:00 மணிவரையில் கட்டணமானது வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

T-Com பகுதியில் கட்டணமானது (F எனக் குறிக்கப்பட்ட பார்க்கிங் பகுதி) காலை 8:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை வசூலிக்கப்படும்.

மல்டி லெவல் பார்க்கிங் இடங்களில் 24 மணிநேரமும் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dubai-Metro_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap