UAE Tamil Web

தனது பேத்தியைக் கையில் ஏந்தியபடி புகைப்படம் எடுத்துக்கொண்ட துபாய் ஆட்சியாளர் – வைரலாகும் புகைப்படம்..!

MBR-baby

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது மகளான ஷேக்கா லத்திஃபாவின் நான்கு மாதக் குழந்தையை கையில் ஏந்தியபடி நிற்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஷேக்கா லத்திஃபாவின் கணவரான ஷேக் ஃபைசல் மற்றும் அவரது மூத்த மகனான முகமது பின் பைசல் ஆகியோரும் இந்த புகைப்படத்தில் இருக்கின்றனர். ஷேக் ஃபைசல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

ராஸ் அல் கைமா அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் ஃபைசல் சவுத் காலித் அல் காசிமிக்கு ஷேக்கா லத்திஃபாவுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு முகமது பின் பைசல் பிறந்தார். இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் இன்னும் பொதுவெளியில் அறிவிக்கப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

MBR-baby
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap