UAE Tamil Web

ரமலானை முன்னிட்டு 553 சிறைக் கைதிகளை விடுவிக்க துபாய் ஆட்சியாளர் உத்தரவு..!

sheikh Mohammed

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத்தலைவரும், பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு 553 சிறைக் கைதிகளை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், “ரமலானை முன்னிட்டு துபாயின் சிறைச்சாலைகளில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 553 பேரை விடுதலை செய்ய துபாய் ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, அபுதாபியின் ஆட்சியாளர் பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீபா பின் சையத் அல் நஹ்யான் மற்றும் ஷார்ஜாவின் ஆட்சியாளர் பெருமதிப்பிற்குரிய ஷேக் டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காஸிமி ஆகியோரும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.