அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இன்று துபாய் எக்ஸ்போவிற்கு வருகைதந்தார்.
அப்போது அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை துபாய் ஆட்சியாளர் சந்தித்தார்.
خلال لقائي اليوم مع أخي محمد بن زايد في جناح الإمارات في إكسبو ٢٠٢٠ … لقاءات إكسبو هي لقاءات المستقبل .. ولقاءات الأفكار الكبيرة .. ولقاءات العقول العظيمة لصنع مستقبل أجمل بإذن الله … حفظ الله دولة الإمارات وأدام عزها ومجدها. pic.twitter.com/46zF7UYP16
— HH Sheikh Mohammed (@HHShkMohd) October 20, 2021
அப்போது இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இதுகுறித்து துபாய் ஆட்சியாளர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” எக்ஸ்போவின் அமீரக பெவிலியனில் இன்று என்னுடைய சகோதரர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தேன். எக்ஸ்போவில் நடைபெறும் சந்திப்புகள் எதிர்காலத்தை மாற்றும் வலிமை கொண்டவை”
“வளமான சிறந்த நாட்டினை உருவாக்க இத்தகைய சிறந்த மனங்களின் சந்திப்புகள் அவசியம். அமீரகத்தின் மகிமையை கடவுள் மேம்படுத்த பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
