அமீரகத்தின் துணைத் தலைவரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஈத் அல் பித்ர் தினத்தில் தனது பேரனை கட்டியணைத்து முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த விடியோவை அக்குழந்தையின் தாய் ஷேக்கா லத்தீபா பின்த் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஐ லவ் யூ ❤️❤️” என்று கேப்சன் இட்டு பதிவிட்டுள்ளார்.
முகமது பின் பைசல் பின் சவுத் அல் காசிமி என்ற குழந்தை, தனது தாத்தாவான துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமிடம் ஈத் அல் ஃபித்ர் வாழ்த்து தெரிவிப்பதற்காக ஓடிச்சென்றது. அப்போது ஷேக் முகமது குழந்தையை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார்.
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பல்லாயிரக்கணாக்கான பார்வையாளர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
View this post on Instagram
இதுபோல, துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈத் அன்று தனது மருமகள் மற்றும் மருமகன்களுடன் படங்களைப் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.