அமீரகத்திற்கு வருகை தந்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், துணை அதிபரும் துபாயின் பிரதமருமான ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூமை சந்தித்து பேசியுள்ளார்.
இதனை அடுத்து அதிபர் ஷேக் முகமது, இந்த சந்திப்பு குறித்து மலையாளத்தில் ட்வீட் செய்திருந்தார். இதனை அமீரத்தில் வசிக்கும் மலையாள மக்கள் டிரெண்ட் செய்து வைராலாக்கினர். புதன்கிழமையான நேற்று நடைபெற்ற துபாய் Expo 2020 -இல் பினராயி விஜயனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு புகைப்படங்களை அவர் பகிர்ந்தார்.
أتمنى لكم وللجميع الصحة والعافيه, أشكركم على تقديرنا لمساهمة هؤلاء من كيرلا في تطوير الإمارات العربية المتحدة ودبي, نود نعمل معا لمزيد تعزيز الرابطة, متواضعا بكرم ضيافتكم واستقبالكم الحار.@HHShkMohd https://t.co/LGuHuRXIRx
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) February 2, 2022
ஷேக் முகமது பின் ராஷீத் அல் மக்தூமை தனது ட்விட்டர் பக்கத்தில் “அமீரகம் கேரளவுடன் சிறப்பான உறவைப் கடைபிடித்து வருகிறது. துபாய் மற்றும் அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு கேரள மக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” என மலையாளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு அரபி மொழியில் நன்றி தெரிவித்த பினராயி, “உங்களின் விருந்து மற்றும் அன்பான வரவேற்புகளை அன்புடன் ஏற்று கொள்கிறேன். அமீரகம் மற்றும் துபாய் உடனான தொடர்பை மேலும் வலுப்படுத்த அரசு விரும்புகிறது” என ட்விட்டரில் கேரள முதல்வர் பதிவிட்டார்.