சக ஊழியருக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஊழியர் பணி நீக்கம்.!

sexual harrasmnt

ஒரு சக ஆண் ஊழியர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஒரு பெண் ஊழியர் குற்றம் சாட்டியதை அடுத்து அந்த ஊழியர்கள் பணிபுரிந்த துணிக்கடையிலிருந்து அந்த ஆண் நீக்கப்பட்டார்.

இந்த சம்பவம் ஜூலை 29, 2018 அன்று நடந்தது. இது அல் ரஷீடியா காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 32 வயதான துனிசிய (Tunisian) நபர் மீது துபாய் கோர்ட் ஆஃப் ஃபர்ஸ்ட் இன்ஸ்டன்ஸ்-ல் (Dubai Court of First Instance) வழக்குப்பதிவு செய்து அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் 41 வயதான அந்த பெண் இந்த சம்பவம் தனது ஷிப்ட்டின் முடிவில் நடந்ததாக கூறியுள்ளார். “எனது ஷிப்ட்டின் முடிவில் பிரதிவாதி என்னை தவறாக அணுகியபோது, ​​நான் இதை மீண்டும் உங்களுக்கு செய்ய விரும்புறீர்களா? என்று என்னிடம் கேட்டார். நான் அவர் பேசுவதை கண்டுகொள்ளாதது போல புறக்கணித்தேன். இருப்பினும், நான் கடையிலிருந்து வெளியே நடந்து கொண்டிருந்தபோது, ​​அவர் என்னைத் தகாத முறையில் தொட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த என்னால் எதுவும் பேசவோ கத்தவோ முடியாமல் போனது. அடுத்த நாள் அவரை பற்றி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தேன்,” என்று அந்த பெண், வழக்கறிஞரிடம் கூறினார்.

மேலும் பொது வழக்கு விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இரண்டு முறை கடையில் தன்னை தவறான முறையில் தொட்டுள்ளார் என்று அந்த பெண் கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, 36 வயதான பிலிப்பைனா மேலாளர், பிரதிவாதியின் செயல்களைப் பற்றி அந்த பெண் ஊழியர் தன்னிடம் புகார் அளித்ததை உறுதிப்படுத்தினார். பின்னர் அவர் கூறுகையில் “குற்றம் சாட்டப்பட்டவர் முதல் முறையாக மாலை 4 மணியளவில் காசாளர் கவுண்டருக்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது அந்த பெண்ணை தகாத முறையில் தொட்டதை நான் அந்த பெண்ணிடமிருந்து அறிந்தேன். அது தவறுதலாக நடந்தது என்று நினைத்து அந்த பெண் அதனை புறக்கணித்தார். இருப்பினும், அந்த பெண் ஊழியர் தொலைபேசியில் பேசுவதில் பிஸியாக இருந்தபோது, அந்த ஆண் ஊழியர் மீண்டும் தவறான தொடுதலை மாலை 5 மணிக்கு நுழைவாயிலில் செய்தார்.” என்றார்.

பிறகு உள் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையின் போது, ​​30 வயதான பிலிப்பைன்ஸ் கடைக்காரர் ஒருவர், பிரதிவாதி முதல் முறையாக அந்த பெண்ணை தொடுவதைக் கண்டதாகக் உறுதியாகக் கூறினார். மேலும் இந்த சம்பவத்தை கைப்பற்றிய ஒரு சி.சி.டி.வி பதிவு பொது வழக்கு ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது.

ஜனவரி 29 அன்று இந்த வழக்கிற்கு தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Loading...