UAE Tamil Web

இன்று துவங்கும் குளோபல் வில்லேஜ் – எல்லா ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு..!

Global-Village

துபாயின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான குளோபல் வில்லேஜ்-ன் 26 வது சீசன் இன்று துவங்குகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதிலும் இருந்து குளோபல் வில்லேஜிற்கு பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தேவையான முழு ஏற்பாட்டையும் செய்துள்ளதாகவும் அதிகமானோர் அமர்வதற்கு ஏற்றபடி கூடுதல் இருக்கைகளை உருவாக்கியுள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். போலவே, உட்சாலைகளும் சீர் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த முறை குளோபல் வில்லேஜின் 25 வது சீசனைக் கொண்டாடும் வகையில் 25 கின்னஸ் சாதனைகள் முறியடிக்கப்பட்டது நினைவிருக்கலாம். அதனால் இந்த சீசனை பார்வையாளர்கள் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

26 நாடுகள் இங்கே தங்களது பெவிலியனை அமைத்துள்ளன. மேலும் 80 நாடுகளின் கலாச்சார சங்கமம் இங்கே நடைபெறுகிறது.

குளோபல் வில்லேஜிற்கான டிக்கெட் கட்டணம் முன்பு 15 திர்ஹம்ஸ் ஆக இருந்தது. இந்நிலையில் இப்போது ஆன்லைனில் விற்கப்படும் டிக்கெட் 15 திர்ஹம்ஸ் ஆகவும் குளோபல் வில்லேஜின் வெளியே இருக்கும் டிக்கெட் கவுண்டர்களில் டிக்கெட்டானது 20 திர்ஹம்ஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Global-Village
0 Shares
Share via
Copy link