அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான மதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ட்விட்டர் ஈத் அல் ஃபித்ர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஒவ்வொரு ஆண்டும், அமீரகம், அரேபிய மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாகி வருகின்றனர். எங்கள் இதயங்கள் மிகவும் அன்பாகவும், சகிப்புத்தன்மையுடனும், அமைதியுடனும் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் எங்கள் இறைவனுக்குக் கீழ்ப்படிவதில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த நாளில் அனைவருக்கும் ஈத் நல்வாழ்த்துக்கள். கடவுள் அனைத்து நல்ல செயல்களையும் ஏற்றுக்கொள்ளட்டும்” என்று ஷேக் முகமது ட்வீட் செய்துள்ளார்.
அதுபோல துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாக கவுன்சிலின் தலைவருமான மதிப்பிற்குரிய ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூமும் ஈத் அல் ஃபித்ர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அமீரகம், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் தலைமைக்கும் மக்களுக்கும், ஈதுல் பித்ர் திருநாளில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதை நன்மை, மகிழ்ச்சி மற்றும் வெற்றிகள் நிறைந்த நாளாக மாற்ற இறைவனை வேண்டுகிறேன்” என்று ஹம்தான் ட்வீட் செய்துள்ளார்.