UAE Tamil Web

தனது இரட்டைக் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட துபாய் இளவரசர் – சில நிமிடங்களிலேயே 200,000 லைக்ஸ்களைப் பெற்ற புகைப்படம்..!

sheikh hamdan

வியாழக்கிழமை மாலை துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்தார். இதனையடுத்து நேற்று தனது குழந்தைகளை ஏந்தியபடி புகைப்படம் ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் துபாய் இளவரசர்.

ஷேக் ஹம்தானின் தாத்தாவான ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்களுடைய படம் பின்புறத்தில் இருக்க, தனது இரட்டைக் குழந்தைகளை தாங்கியபடி அவர் அமர்ந்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Fazza (@faz3)

முன்னதாக இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தைக்கு ஷேக்கா பின்ட் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் எனவும் ஆண் குழந்தைக்கு ரஷீத் பின் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம் எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக துபாய் ஊடக அலுவலகம் தெரிவித்திருந்தது.

அரபு மொழியில் ஷேக்கா என்றால் இளவரசி என்றும் ரஷீத் என்றால் சரியாக வழிநடத்துபவர் எனவும் பொருளாகும்.

தனது பதிவில் அல்லாவின் அருளுக்கு நன்றி தெரிவிப்பதாக இளவரசர் குறிப்பிட்டிருந்தார். அவருடைய இந்த புகைப்படத்திற்கு சில நிமிடங்களிலேயே 200,000 லைக்ஸ்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இளவரசருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.